விண்வெளியில் இருந்து பூமியின் துருவ ஒளி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விண்வெளியிலிருந்து பூமியின் மேற்பரப்பில் நெளிந்து வளைந்து செல்லும் துருவ ஒளி எனப்படும் அரோராவின் கண்கவர் காட்சிகளைப் பதிவு செய்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐரோப்பிய விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனாட், தனது 'எப்சிலோன்' விண்வெளிப் பயணத்தின் போது இந்த அற்புதமான காட்சிகளை பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.

பூமியின் வளிமண்டலத்திற்கு மேலாக பச்சை மற்றும் ஊதா நிறங்களில் ஒளிரும் அரோரா, விண்வெளியில் இருந்து இன்னும் பிரமாண்டமாக காட்சியளிப்பது இந்தக் காணொளியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த அரிய காட்சிகள் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இலட்சக்கணக்கானோர் அந்தக் காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.

விண்வெளியில் இருந்து பூமியின் இயற்கை அழகை புதிய கோணத்தில் வெளிப்படுத்திய இந்தக் காணொளி, இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்