அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அமெரிக்க அரசு 'சுதந்திரம் 250' (Freedom 250) என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தலைநகர் வாஷிங்டனில் கடந்த 4-ந்தேதி வெள்ளை மாளிகை முன்பு நடைபெற்ற பிரமாண்ட அரசியல் பேரணியில் ஜனாதிபதி டிரம்ப் முறைப்படி இந்த விழாவை தொடங்கி வைத்தார்.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தில் பிரமாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பாலத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வானை நோக்கி கரும்புகை மூட்டமும், தீப்பிழம்புகளும் எழும்பியதால் அப்பகுதியே பரபரப்பானது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். வாணவேடிக்கை நிகழ்ச்சியின்போது பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தூரத்தில் நிறுத்தப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
Font size:
Print
Related Posts
