இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால், கடந்த நான்கு நாட்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு, மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது.
புனே–மும்பை விரைவுச்சாலை மற்றும் பழைய புனே–மும்பை நெடுஞ்சாலை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மும்பையின் மன்குர்ட் பகுதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், ஐந்து குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததுடன், நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்த சம்பவங்களில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 217 விமானங்கள் தாமதமாகியுள்ளன. ரயில் மற்றும் பேருந்து சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட்டாலும், பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாசிக் மாவட்டத்தில் நாளை மேக வெடிப்பு ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அங்கு சுமார் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் மகாராஷ்டிர அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Font size:
Print
Related Posts
