Font size:
Print
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு தினங்களாக இடம்பெற்ற வன்முறை மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் 7 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குகின்றனர். மோதலில் காயமடைந்த பலர் தொடர்ந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
