கனடா கடற்படைக்கு 12 புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனேடிய கடற்படைக்காக 12 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்வனவு செய்யும் முக்கிய திட்டத்தை பிரதமர் மார்க் கார்னி இன்று ஹாலிஃபாக்ஸ் நகரில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டில் பங்கேற்க புறப்படுவதற்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியாகும் என அரசாங்க மற்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் பெரும் ஒப்பந்தத்தைப் பெற ஜெர்மனி–நோர்வே கூட்டணியின் TKMS நிறுவனமும், தென் கொரியாவின்  ஹன்வா  நிறுவனமும் இறுதிக்கட்ட போட்டியில் உள்ளன.

தற்போது கனேடிய கடற்படையில் உள்ள நான்கு விக்டோரியா ரக நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்று மட்டுமே சேவையில் உள்ள நிலையில், புதிய திட்டத்தின் கீழ் 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதுடன், அவற்றின் 30 முதல் 50 ஆண்டுகளுக்கான பராமரிப்பு செலவுகளும் சேர்த்து 100 பில்லியன் கனேடிய டொலர்களுக்கும் அதிகமான முதலீடு மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2035 ஆம் ஆண்டுக்குள் நேட்டோவின் பாதுகாப்புச் செலவின இலக்கை எட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் பாதுகாப்பு முதலீடு மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்