கர்நாடகா மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் ஜீப் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தார்வாடிலிருந்து தர்மஸ்தலா மற்றும் சிக்கமகளூரு பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வதற்காக ஜீப்பில் பயணம் செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில், ஜீப் ஓட்டுநர் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனத்தை சாலையின் வலதுபுறமாக இயக்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த நேரத்தில் அங்கோலாவிலிருந்து எல்லப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த லாரியுடன் ஜீப் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும், காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
