ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சித்ததாக ஈரான் புரட்சிகர காவல்படை குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அயதுல்லா அலி கமெனியின் இறுதிச் சடங்குகள் கடந்த வாரம் தலைநகர் தெஹ்ரானில் தொடங்கின. பின்னர் அவரது உடல் ஈராக்கின் கர்பலா நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
தற்போது அவரது சொந்த ஊரான ஈரானின் மஷ்ஹத் நகரில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மஷ்ஹத் நகருக்குச் செல்லும் பாதைகளில் உள்ள இரண்டு பாலங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கியதாகவும், அதன் மூலம் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க முயன்றதாகவும் ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
அந்த தாக்குதலுக்குப் பதிலடியாகவே பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது.
மேலும், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் குறிவைக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
