வியட்நாமில் சுற்றுலா சென்ற இந்தியர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில், தமிழர் ஒருவர் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாமின் பு கியூக் தீவு அருகிலுள்ள கடல் பகுதியில், 32 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், தமிழ்நாட்டின் பழநியைச் சேர்ந்த 44 வயதுடைய முருகபிரபு உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில், ஹோ சி மின் நகரிலுள்ள இந்திய துணைத் தூதரகத்திலும், ஹனோயிலுள்ள இந்திய தூதரகத்திலும் அவசர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
