தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபலமான மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாங்காக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அந்த மதுபான விடுதியில் நள்ளிரவு திடீரென தீப்பற்றியதைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேரப் போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விராகுல், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தாய்லாந்து முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Font size:
Print
Related Posts
