வலி.வடக்கில் இராணுவ விவசாயம் சர்ச்சை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியின் பள்ளிக்குடா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(12.07.2026) இடம்பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று பள்ளிக்குடா சந்தியில் வலது புறமாகத் திரும்புவதற்கு முற்பட்டபோது, அதன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயமடைந்துள்ளதுடன், பின்னால் பயணித்தவருடம் உடனடியாக மீட்கப்பட்டு, பூநகரி வைத்திசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்கைக்காக இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று(13) தெலிகடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை