மத்தியக்கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி, உலகத் தலைவர்கள் தொடர்பாக 'பழிவாங்கும் பட்டியல்' ஒன்றை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தகவல்களின்படி, அந்தப் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதல் இடத்திலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான், இறுதிச் சடங்கிற்குப் பிறகு ஆற்றிய முதல் பொது உரையில், மறைந்த தனது தந்தையும் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் மரணத்திற்கு பழிவாங்க 13 உலகத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஒரு 'பழிவாங்கும் பட்டியலை' வெளியிட்டது, உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனி தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலர் பீட் ஹெக்செத் உள்ளிட்டோர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, தனது உரையில் "பழிவாங்குவதே நமது தேசத்தின் விருப்பம்; அது தவிர்க்க முடியாமல் நிறைவேற்றப்படும்" என்று மொஜ்தபா காமேனி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல்கள் வெளியாகும் நிலையில், டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து ஈரான் சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Font size:
Print
Related Posts
