ஈரான் கடற்படைத் தளம் மீது அமெரிக்கா தாக்குதல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

நள்ளிரவில் இந்த பயங்கர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க மத்திய கட்டளையகம் சற்றுமுன்னர் இதனை தெரிவித்துள்ளது.

தெற்கு ஈரானில் உள்ள பண்டார் அப்பாஸ் கடற்படைத் தளத்தில் (Bandar Abbas Naval Base) இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது.

குறித்த தளத்தின் மீது ஒரே திசையில் சென்று தாக்கும் பல ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள கட்டளையகம், இது தொடர்பான காணொளி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

நேற்று இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களானது வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல் நடத்தும் திறனைப் பெருமளவில் சீர்குலைத்துள்ளது என கட்டளையகம் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை