வெளிநாட்டில் இருந்து வந்தோரின் வீடுகளில் திருட்டு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணம் காரைநகரில், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தோரின் வீடுகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 1,600 கனேடிய டொலர், ஒரு ஜோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், மற்றொரு வீட்டிலிருந்து 400 யூரோ மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணமும் களவாடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, வீட்டு உரிமையாளர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணையின் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம் மற்றும் நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை