ஈரான் துறைமுகங்களுக்கு புதிய கடற்படைத் தடை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்தியக்கிழக்கில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக மீண்டும் கடற்படைத் தடையை அமல்படுத்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதனுடன், 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் அதைச் சூழ்ந்த கடற்பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான இராணுவ விமானங்களும் மேற்காசிய முழுவதும் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய நடவடிக்கையால், ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் கப்பல்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலளித்துள்ள ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி, அமெரிக்காவுடனான தற்காலிக அமைதி ஒப்பந்தம் கடற்படைத் தடையின் மூலம் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இனி அந்த ஒப்பந்தத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் ஈரானுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அடுத்தகட்டமாக ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளமை, மத்தியக்கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை