ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகள் வௌியேறும்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்கா சென்றுள்ள ஈராக் பிரதமர் அலி அல்-சைதி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈராக் பிரதமர், வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிடும் என்று அறிவித்தார்.

அதேவேளை, அமெரிக்க இராணுவம் வெளியேறினாலும், அமெரிக்க நிறுவனங்கள் ஈராக்கில் தொடர்ந்து முதலீடு செய்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்தியக்கிழக்கில் பாதுகாப்பு சூழல் தொடர்ந்து பதற்றமாக இருக்கும் நிலையில், அமெரிக்க படைகள் வெளியேறும் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
 


 

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை