உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது.
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
கடந்த உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பிரான்ஸ் அணி, இம்முறை அரையிறுதியிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பிரான்ஸின் பல நகரங்களில் ரசிகர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சில இடங்களில் பொலிஸாருடன் மோதல்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும், தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட பகுதிகளில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக கலவரங்களைத் தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Font size:
Print
Related Posts
