ஈரானில் குழந்தைகள் மருத்துவமனை அருகே அமெரிக்க ஏவுகணை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்தியக்கிழக்கில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மேற்காசிய நாடன ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர், நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்கிறது.

தினமும் விதவிதமான தாக்குதல்களுடன், இரு தரப்பும் மாறி மாறி அறிக்கைகள், அறிவிப்புகள் வெளியிட்டு வருவது பதற்றம் நீடித்து வருகிறது.

தற்போது ஈரானில் உள்ள குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனை அருகே அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைக்கு அருகே பல ஏவுகணைகள் தாக்கியதால், நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

அமெரிக்கப் படைகள் இன்று ஈரானுக்கு எதிரான இரண்டாவது கட்டத் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கின. அமெரிக்க அதிபர் டிரம்பின் வழிகாட்டுதலின் கீழ், ராணுவம் தாக்குதல் நடத்தியது என அமெரிக்க மத்திய படை தலைமையகம் தெரிவித்துள்ளது

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை