அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனா தலையிட்டதாக மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு தொலைக்காட்சி உரையாற்றிய டிரம்ப் , 2020 தேர்தலில் தன்னை தோற்கடிக்கும் நோக்கில் சீனா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவின் சுமார் 22 கோடி வாக்காளர்களின் தகவல்களை சீனா சட்டவிரோதமாகப் பெற்று, தனக்கு எதிரான செய்திகளை வெளியிட சில அமெரிக்க ஊடகவியலாளர்களுக்கு பணம் வழங்கியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
வரவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடைமுறைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும், புதிய வாக்காளர் அடையாள அட்டை மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.
டிரம்ப் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் உறுதியான ஆதாரங்களை வெளியிடவில்லை. அதேவேளை, சீனா இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கடந்த காலங்களிலும் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.
