இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில், கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர்களில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக நோய் உள்ளிட்ட நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே காலப்பகுதியில் மொத்தம் 67 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது பாதிக்கப்பட்டவர்களில் மூவர் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பொதுமக்கள் தனிநபர் சுகாதாரம், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
