பள்ளி பேருந்து கவிழ்ந்து 21 மாணவர்கள் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உகாண்டாவில் கல்விச்சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 21 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் கம்பாலாவில் உள்ள பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள், சிப்பி நீர்வீழ்ச்சிக்கு கல்விச்சுற்றுலா சென்று, அங்கிருந்து பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது செக்வாடிட் கிராமம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பெரிய கல்லில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 21 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை