2 எண்ணெய் கப்பல்கள் கண்ணி வெடியில் மோதி வெடிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹார்முஸ் நீரிணையில் இருந்த கண்ணி வெடிகளில் மோதியதில் ஹார்மஸ் நீரிணை வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் வெடித்து சிதறியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணைக்குத் தெற்கே அமைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிப் பகுதி வழியாகச் செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள்  வெடித்துத் தீப்பிடித்து எரிந்தன.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை கையாண்ட, குறுகலான அதே சமயம் மிக முக்கியமான அந்த நீர்வழிப்பாதையின் வழியாகச் செல்ல முயன்ற நான்கு கப்பல்களைத் தடுத்து நிறுத்தியதாகவும் ஐ.ஆர்.ஜி.சி (IRGC) மேலும் தெரிவித்தது.

இதன் காரணமாக அப்பகுதியில் கடல்வழிப் போக்குவரத்து தீவிர ஆபத்து நிறைந்ததாகக் கூறி, ஹார்முஸ் நீரிணை முழுவதுமாக மூடப்பட்டுள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது. 

முக்கிய வர்த்தக நீர்வழியில் கடல்வழிப் போக்குவரத்தின் கட்டுப்பாடு குறித்த தகராறே, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான சமீபத்திய மோதலுக்குக் காரணமாக அமைந்தது.

Related Posts
©   Thedipaar

எகிறியது எண்ணை விலை

©   Thedipaar

கனடாவில் அவசரநிலை