யாழில் விபத்தில் சிக்கி இளைஞன் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணம் - கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

29 வயதுடைய சின்னராசா துளசிகரன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது   திடீரென வண்டு ஒன்று அவரது கண்ணுக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த அவர் விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதன்போது அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அதி தீவிர சீக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 


 

Related Posts
©   Thedipaar

எகிறியது எண்ணை விலை

©   Thedipaar

கனடாவில் அவசரநிலை