நிலவில் மோதவுள்ள ராக்கெட்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட்டின் ஒரு பகுதி, எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் மோதக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

கடந்த 2025-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட்டின் ஒரு பகுதி, போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் பூமிக்குத் திரும்ப முடியாமல், விண்வெளியில் கட்டுப்பாடற்ற பாதையில் சுற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகிய அந்த ராக்கெட் பகுதி தற்போது நிலவை நோக்கி நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கணிப்புகளின்படி, மணிக்கு சுமார் 8 ஆயிரத்து 750 கிலோமீட்டர் வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதும் இந்த ராக்கெட், அங்கு புதிய பள்ளம் ஒன்றை உருவாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மோதல் பூமிக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்தாது என்றும், இருப்பினும் விண்வெளிக் குப்பைகள் மற்றும் அவற்றின் நீண்டகால தாக்கங்கள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts
©   Thedipaar

எகிறியது எண்ணை விலை

©   Thedipaar

கனடாவில் அவசரநிலை