ஈராக் மீது அமெரிக்கா - சவுதி கூட்டுத் தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈராகில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை குறிவைத்து, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இணைந்து அதிரடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல்களின்படி, ஈராக்கில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் அண்மையில் சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் வயல்கள், கிடங்குகள் மற்றும் எண்ணெய்க் கிணறுகளை ட்ரோன் மூலம் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்குப் பதிலடியாக, ஈராகின் 7 மாகாணங்களில் கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இணைந்து ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல், சவுதியின் எண்ணெய் உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட ட்ரோன் தாக்குதலுக்கான பதிலடி நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச அளவில் கவனம் திரும்பியுள்ளது.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை