Font size:
Print
வவுனியா மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற கோர சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா A9 பிரதான வீதியின் கனகராயன்குளம் பகுதியில், இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம், வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் அடையாளம் மற்றும் விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Posts
