ஈரான் மீது ‘கடுமையான தாக்குதல் அலை’: அமெரிக்கா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரான் மீது "கடுமையான தாக்குதல் அலை" வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து இந்த இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்காம் வெளியிட்ட தகவலின்படி, ஈரானில் அமைந்துள்ள இராணுவக் கட்டளை மையங்கள், ஏவுகணைத் தளங்கள், ட்ரோன் வசதிகள், கடலோரக் கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எனப்படும் IRGC-இன் பல முக்கிய இலக்குகள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கும் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பிற்கும் ஈரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறைப்பதே என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும், வளைகுடா பிராந்தியத்தில் தற்போது 50 ஆயிரத்திற்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் முழு விழிப்புடனும், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் ஆயத்த நிலையிலும் இருப்பதாக சென்ட்காம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஈரான் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பது குறித்து சர்வதேச கவனம் தற்போது திரும்பியுள்ளது.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை