ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜப்பான் கனடாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
வெளியாகியுள்ள தகவல்களின்படி, 2025-ஆம் ஆண்டிற்குப் பிறகு கனடாவின் முதல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, எக்ஸான் மொபில் நிறுவனத்தின் மூலம் ஜப்பானுக்கு கப்பலில் அனுப்பப்பட்டுள்ளது.
750 ஆயிரம் பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட "ஃப்ரீடம் குளோரி" என்ற கப்பல், கனடாவின் வான்கூவரில் இருந்து டிரான்ஸ் மவுண்டன் குழாய்வழி கொண்டு வரப்பட்ட கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ஈனியோஸ், இந்த TMX கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாக ஏற்பட்ட விநியோகத் தடையால், ஜப்பான் உட்பட பல ஆசிய நாடுகள் தங்களது எண்ணெய் இறக்குமதி ஆதாரங்களை அவசரமாகப் பன்முகப்படுத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் மீண்டும் கனடாவின் TMX குழாய்வழி கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஜப்பான் அரசு இந்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பை 1.3 சதவீதத்திலிருந்து 0.9 சதவீதமாகக் குறைத்துள்ளது.
அதேவேளை, அமெரிக்கா புதிய வரிகளை அறிவித்திருந்தாலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் கனடாவின் எண்ணெயை அரசியல் அழுத்தக் கருவியாக பயன்படுத்துவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
Font size:
Print
Related Posts
