படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்று(31.07.2026) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
இதற்கு முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருந்த நிலையிலேயே இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நீதியான விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரி, ஊடக பிரதிஅமைச்சரின் நிகழ்வினை யாழ். ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் புறக்கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Font size:
Print
Related Posts
