காஸாவில் ஹமாஸ் அமைப்பு மற்றும் பிற ஆயுதக் குழுக்களை முழுமையாக ஆயுதக் களைவு செய்யும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பின்படி, 'அமைதி சபை' (Board of Peace) என்ற அமைப்பின் மூலம் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், காஸாவில் நீடித்து வரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களின் முழுமையான ஆயுதக் களைவு இந்த உடன்படிக்கையின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த அறிவிப்பு தொடர்பாக ஹமாஸ் தரப்பிலிருந்தோ, பிற சம்பந்தப்பட்ட தரப்புகளிலிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
Font size:
Print
Related Posts
