ஹார்முஸ் ஜலசந்தி திறக்க முடியாது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடரும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி தங்களது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அமெரிக்காவும், ஈரானும் தனித்தனியாகக் கூறி வரும் நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை – IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது தொடர்பான இறுதி முடிவு ஈரானிடமே உள்ளது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றாவிட்டால், கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில், "ஹார்முஸ் ஜலசந்தி எங்கள் நிலப்பகுதியின் ஒரு பகுதியாகும். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து வரும் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை ஏற்க முடியாது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்க அதிகாரிகளின் அச்சுறுத்தல்களும், கடல்வழிப் போக்குவரத்தில் தலையீடுகளும் தொடரும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான சூழ்நிலை உருவாகாது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை