ஈரானுக்கு டிரம்பின் எச்சரிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய இராணுவத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு டிரம்ப் அமெரிக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட டொனால்ட் டிரம்ப்,

"நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம். ஒரு கட்டத்தில், இதை இனி தாங்க முடியாது என்று அவர்களே கூறும் நிலை உருவாகும்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பிற முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் போர்க் குற்றமாகக் கருதப்படக்கூடும் என மனித உரிமை அமைப்புகளும் சட்ட நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த கட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை