ருமேஷ் தரங்க வரலாற்றுச் சாதனை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

23 வயதான ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி இந்த வெற்றியைப் பெற்றார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரிலுள்ள ஸ்காட்ஸ்டவுன் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், தனது இரண்டாவது முயற்சியிலேயே 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்தார்.

இந்த வெற்றியின் மூலம், 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை ருமேஷ் தரங்க பெற்றுத் தந்துள்ளார்.

அத்துடன், பொதுநலவாய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இலங்கை வென்றுள்ள ஆறாவது தங்கப் பதக்கமும் இதுவாகும்.

மேலும், 2006ஆம் ஆண்டு பளுதூக்கும் வீரர் சிந்தன விதானகே தங்கப் பதக்கம் வென்றதற்குப் பிறகு, 20 ஆண்டுகள் கழித்து பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை மீண்டும் தங்கப் பதக்கம் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

ருமேஷ் தரங்கின் இந்த வெற்றி, இலங்கை தடகள வரலாற்றில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. உலக அரங்கில் இலங்கையின் திறமையை மீண்டும் நிரூபித்துள்ள இந்த சாதனைக்கு விளையாட்டு ரசிகர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை