ஈரானின் புதிய உச்ச தலைவராகக் கூறப்படும் மொஜ்தபா கமெனியை கண்டறிவதற்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ மற்றும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில், முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி உயிரிழந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, மொஜ்தபா கமெனி புதிய தலைவராக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், அவர் பொறுப்பேற்றதாகக் கூறப்படும் காலத்திலிருந்து இதுவரை எந்தப் பொதுநிகழ்ச்சியிலும் தோன்றவில்லை. எந்த அதிகாரப்பூர்வ உரையையும் நிகழ்த்தாத நிலையில், அவரது இருப்பிடம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன.
உளவுத்துறை ஆய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, மொஜ்தபா கமெனி தெஹ்ரானில் உள்ள பலத்த பாதுகாப்பு கொண்ட நிலத்தடி பதுங்கு வளாகத்திலோ அல்லது கோம் நகருக்கு அருகிலுள்ள சுரங்கப்பாதை அமைப்புகளிலோ தங்கியிருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
மேலும், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஈரான் போலி நபர்களை பயன்படுத்தி வரக்கூடும் என்ற சந்தேகமும் வெளிநாட்டு உளவுத்துறைகளிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அவரது தந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் தாக்குதலுக்குப் பின்னர், மொஜ்தபா கமெனியின் உடல்நிலை குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
அமெரிக்க உளவுத்துறை, அவர் உயிருடன் இருப்பதாக நம்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அவர் கடுமையாகக் காயமடைந்திருக்கலாம் என்ற தகவல்களும் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகின்றன.
Font size:
Print
Related Posts
