அமெரிக்கா - இஸ்ரேல் ஈரானுக்கு புதிய தாக்குதல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து புதிய வான்வழித் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய நாட்களில், ஈரானின் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்களை முன்னெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

குவைத், பஹ்ரைன், எகிப்து மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குவைத்தில் சில முக்கிய இராணுவ மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், குவைத் நோக்கி பறந்த பல ஈரானிய ட்ரோன்கள் வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எகிப்தும் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள், எரிபொருள் சேமிப்பு மையங்கள் மற்றும் முக்கிய மூலோபாய இலக்குகளை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இந்தத் தாக்குதலுக்கான இறுதி அனுமதியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை வழங்கவில்லை என்றும், வார இறுதிக்குள் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை