பரிசுப்பொதியில் ரூ.106 மில்லியன் ஹஷிஸ்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பரிசுப்பொதியாக வந்த சரக்கில், 10 கிலோவுக்கும் அதிகமான ஹஷிஸ் போதைப்பொருளை இலங்கை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் UL405 விமானம் மூலம், கடந்த ஜூலை 24 ஆம் திகதி இந்தப் பொதி இலங்கையை வந்தடைந்திருந்தது.

பரிசுப்பொதி என அறிவிக்கப்பட்டிருந்த இந்த சரக்கை, சுங்க அதிகாரிகள் ஜூலை 31 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரின் முன்னிலையில் திறந்து பரிசோதனை செய்தனர்.

அப்போது, உலோகக் கொள்கலன்களுக்குள் மிகவும் நூதனமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பொதிகளில் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலதிக ஆய்வுகளின் பின்னர், கஞ்சா, ஹஷிஷ் மற்றும் ஹஷிஷ் எண்ணெய் உள்ளிட்ட மொத்தம் 10.608 கிலோ போதைப்பொருட்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு 106.08 மில்லியன் ரூபாய் என சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்தக் கடத்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை