ஹோர்முஸ் அருகே எண்ணெய் கப்பல் தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஓமான் கடற்பரப்பில், ஹோர்முஸ் நீரிணையின் நுழைவாயிலுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்ப் தாங்கி கப்பல் மீது மர்ம தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியக் கடற்படையின் கடல்சார் வர்த்தகச் செயல்பாடுகள் பிரிவான UKMTO, இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

ஓமானின் லிமா பகுதிக்கு வடகிழக்கே சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது எறிபொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் கப்பலின் இயந்திர அறை கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், கப்பலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், கப்பலில் இருந்த பணியாளர்கள் எவருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை மேற்கொண்டது யார் என்பது குறித்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே மற்றொரு எண்ணெய் கப்பலின் மாலுமி, கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பை கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவின் கடல்சார் கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைத் தடுக்கலாம் என ஈரான் முன்னதாக எச்சரித்திருந்த நிலையில், இந்தச் சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை