யாழில் பட்டாசு வெடித்து இளைஞர் மரணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணத்தில் பட்டாசு வெடித்ததில் 32 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் செல்வராசா கசிவன், வயது 32 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவல்களின்படி, நேற்று மடு மாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டிருந்தன.

அப்போது ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த பட்டாசை மீண்டும் வெடிக்கச் செய்வதற்காக செல்வராசா கசிவன் அதற்கு அருகில் சென்று ஊதியபோது, அது திடீரென வெடித்துள்ளது.

இந்த வெடிப்பில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மரண விசாரணை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பட்டாசுகளை கையாளும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை