மஹர சிறை கலவரம்; ஊரடங்கு தொடர்கிறது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் அமைதியைப் பேணுவதற்காக, ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.

நேற்று (01) மதியம், கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக, மஹர சிறையில் கலவரம் வெடித்தது.

இதன்போது, அங்கு, 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஒரு கைதி உயிரிழந்தார்.

தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த நேற்றிரவு சிறப்பு அதிரடிப் படை, இராணுவம் மற்றும் பொலிஸாரை ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கலவரத்தைக் கண்காணிக்க விமானப்படையும் பெல் 412 விமானத்தையும் ஒரு ட்ரோனையும் ஈடுபடுத்தியது.

இந்நிலையில், நேற்று பகல், கைதிகள் தலைமைச் சிறை அதிகாரியின் அலுவலகத்திற்கு தீ வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நேற்று மதியம், கைதிகளைப் பார்க்க உறவினர்கள் மஹர சிறைக்கு சென்ற நிலையில், ஆனால் அவர்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

அதன்படி, உறவினர்கள் மஹர சிறைக்கு முன்பாகக் கூடியதாகவும் அங்கு அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறையிலிருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் போன்ற சில ஒலிகளைக் கேட்ட பிறகு, கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் உள்ளூர் மக்களும் பொலிஸார் தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.

பின்னர், பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், கைதிகளைப் பார்க்க சென்ற சில உறவினர்களும் உள்ளூர் மக்களும் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தற்போதைய சூழ்நிலையில், மஹர பகுதியில் உள்ள பல பொலிஸ் அதிகார வரம்புகளில் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸார் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

இதற்கிடையில், பதற்றமாக இருந்த மஹர சிறைச்சாலையின் நிலைமையைக் கண்காணிப்பதற்காக, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த மற்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஆகியோரும் நேற்று இரவு சிறை வளாகத்தைப் பார்வையிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் கலந்தாலோசித்ததாகவும், சிறைச்சாலைக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர், ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.


சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை