விமானம் விபத்து! 13 பேர் மரணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பெருவில் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் பாரம்பரியப் பகுதியான நாஸ்கா கோடுகளுக்கு (Nazca Lines) மேலே பறந்துகொண்டிருந்த சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 13 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் 11 சுற்றுலாப் பயணிகளும், 2 விமானிகளும் பயணித்திருந்தனர் என்றும் உயிரிழந்தவர்களில் 2 ஜெர்மனி, 2 ஸ்பெயின் மற்றும் 7 இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக பெருவின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதன்படி விமானம் பெருவின் பிஸ்கோ (Pisco) விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில், புவெப்லோ வியெஹோ (Pueblo Viejo) பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை