படகில் தீ; 5 பேர் பலி, 41 பேர் மாயம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளனர்.

தேடுதல் மற்றும் மீட்பு பணியகம் வெளியிட்ட தகவலின்படி, 271 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த இந்தப் படகில் இருந்து, இன்று பிற்பகல் வரை 225 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபயா நகரிலிருந்து, தெற்கு சுலவேசியின் மகசார் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, இன்று காலை இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகில் தீப்பரவல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், காணாமல் போன 41 பேரைத் தேடும் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை