லெபனானின் நிலப்பரப்பை ஆக்கிரமித்த இஸ்ரேல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தெற்கு லெபனானில் சுமார் 2,000 சதுர கிலோமீட்டர், அதாவது 770 சதுர மைல்கள் நிலப்பரப்பை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாக லெபனான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டியது அவசியம் என லெபனான் இராணுவத் தளபதி ஜெனரல் ரொடால்ப் ஹைகல் வலியுறுத்தியுள்ளார்.

"எங்கள் நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் எங்கள் உரிமை. எங்கள் பிரதேசத்தின் எந்தப் பகுதியையும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை நாங்கள் ஏற்க முடியாது" என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தியாகிகளின் உயிர்தியாகம் வீணாகாது என்றும், அனைத்து சவால்களையும் மீறி மக்களுக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்போம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள், பொதுமக்களின் உள்கட்டமைப்புகள், கலாச்சார பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக லெபனானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

அதேவேளை, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு இராஜதந்திர தீர்வுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும், மேலும் அழிவு அதிகரிக்காமல் இருக்க அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை