ரிப்பர் மோதி 2 இளைஞர்கள் மரணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் – ஜின்னாநகர், 59ஆம் கட்டை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மூதூர் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய தமிழ் செல்வன் தனேஸ் மற்றும் 19 வயதுடைய அருணவன் செல்வரெத்தினம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரில் ஒருவர் பல்கலைக்கழக மாணவராகவும், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த இளைஞராகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தையடுத்து ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


 

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை