Font size:
Print
கேகாலை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கர சாலை விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரம்புக்கனையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், திகணையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் இன்று காலை சுமார் 6.15 மணியளவில் மோதியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 20 பேர் கேகாலை போதனா மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts
