மஹர சிறையில் ரூ.15 கோடி சேதம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மஹர சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகள் சிறையில் உள்ள பல சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளதாக சிறைதச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல கட்டிடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், சிறை மறுவாழ்வுத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் தையல் இயந்திரங்கள் உட்பட பல உபகரணங்களைச் கைதிகள் அழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நள்ளிரவு வேளையில், சிறைக்கைதிகள் சிறை வளாகத்திற்கு வெளியே கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், சுற்றியுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், சாத்தான், அசார், பெட்டா மற்றும் மற்றொரு கைதியால் இந்த கலவரம் திட்டமிடப்பட்டது என்று காவல்துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல், கலவரத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கைதிகளைச் சிறைச்சாலை திணைக்களம் அடையாளம் கண்டு, அவர்களில் 104 பேரை பூஸ்ஸ உட்பட 7 பிற சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

4,100-க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொண்ட மஹர சிறையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கலவரம் வெடித்ததையடுத்து, 13 மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு, இன்று காலை சுமார் 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


 

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை