கனடாவில் பல வீடுகள் தீக்கிரை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வெர்னன் (Vernon) பகுதியில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீ வேகமாக பரவி, பல வீடுகளை தீக்கிரையாக்கியுள்ளது.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடும் வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக தீ மேலும் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை