உதயநிதி ஸ்டாலின் கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை த்ரிஷா தொடர்பாக வெளியான சர்ச்சைக்குரிய கருத்து குறித்த வழக்கில், திமுக இளைஞர் அணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற தஞ்சாவூர் காவல்துறையினர், கைது நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, உதயநிதியை தங்களுடன் தஞ்சாவூருக்கு வருமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது இல்லம் முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சிலர் காவல்துறையினரால் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, உதயநிதியை குறிப்பிட்ட நேரம் வரை கைது செய்ய வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உதயநிதி அழைத்துச் செல்லப்படும் காவல்துறையினரின் வாகனம் மீறு ஏறி நின்று திமுகவினர் முழக்கமிட்டனர்.

இதையடுத்து, விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.


 

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை