அகதிகள் படகு கவிழ்ந்து 17 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஸ்பெயின் அருகே மத்திய தரைக்கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 19 பேர் மத்திய தரைக்கடல் வழியாக ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் பயணித்த படகு, ஸ்பெயினின் மல்ரோகா தீவு அருகே சென்றபோது கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படகில் இருந்த 17 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும், இரண்டு பேர் நீந்தி அருகிலிருந்த தீவை அடைந்து உயிர் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பெயின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை