இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒப்பந்தங்கள் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் மேற்கொள்ளும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜெருசலேமில் நடைபெற்ற அரசு நிகழ்வொன்றில் உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் இருப்பு தொடர்பான விவகாரங்களில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்று வலியுறுத்தினார்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை, இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவராகவும் நெதன்யாகு பாராட்டினார்.
இந்த கருத்துக்கள், நவீன சீயோனிச இயக்கத்தின் நிறுவனரான தியோடோர் ஹெர்ஸலின் தாத்தா, பாட்டியின் உடல்கள் ஜெருசலேமிலுள்ள ஹெர்ஸல் மலையில் மீளடக்கம் செய்யப்பட்ட அரசு நிகழ்வின் போது வெளியிடப்பட்டன.
இதற்கிடையில், இத்தாலியின் ரோம் நகரில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கிடையே கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையிலேயே நெதன்யாகுவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
