செம்மணி ; 499 என்புக்கூடுகள் அடையாளம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று 45வது நாள் பணிகளின் போது மேலும் 8 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நீதிமன்ற அனுமதியுடன் 56 நாட்கள் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட அகழாய்வின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 5 என்புக்கூடுகள் இன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அகழாய்வின் போது நாணயக் குற்றி ஒன்றும், சிறுவர்களின் ஆடைகளுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் சில பொத்தான்களும் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

இதுவரை முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக மொத்தம் 99 நாட்கள் அகழாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, செம்மணி மனித புதைகுழி பகுதியில் இதுவரை மொத்தம் 499 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 494 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளைய  தினம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு 100ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது