ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொஜ்தபா கமேனி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஈரானின் உயர்மட்ட தலைமைத்துவத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி, அவரது உடல்நிலை தொடர்பில் கவலைக்கிடமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, தற்போதைய சூழ்நிலையில் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியுடன் நேரடியாக தொடர்புகொள்வது மிகவும் கடினமாக இருப்பதாக தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கருத்து, மொஜ்தபா கமேனியின் உடல்நிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களுக்கு மேலும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், மொஜ்தபா கமேனி உயிரிழந்துவிட்டார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
அவரது உடல்நிலை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து ஈரான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான தெளிவுபடுத்தல் வெளியாகும் வரை உறுதியாகக் கூற முடியாது.
இதனால், ஈரானின் உச்ச தலைமைத்துவம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.
Font size:
Print
Related Posts
